இலங்கை தமிழர்களுக்கு மரியாதை, அமைதி வேண்டும்! ராஜபக்ச - மோடி சந்திப்பு தொடர்பிலான முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சமத்துவம், நீதி ஆகியவற்றை இலங்கை அரசு வழங்கும் என நம்புவதாக இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து உரையாற்றினார். இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் சேர்ந்து அறிக்கையை வெளியிட்டனர்.

இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருக்கும், சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவற்றை இலங்கை அரசு வழங்கும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக மோடி தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டுமல்ல நெருங்கிய நட்பு நாடுகள் எனத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது, இரு நாட்டின் கூட்டு பொருளாதார திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் தாம் விவாதித்தாகக் மோடி கூறினார்.

தீவிரவாதம் இந்த பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், இலங்கையும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்