டிக்டாக்குக்கு அடிமையான கணவன்! கண்ணீர் விட்ட மனைவி... தோழியுடன் தனிக்குடித்தனம் நடத்தியது அம்பலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் டிக்டாக் தோழியுடன் ஓட்டம் பிடித்த திருமணமான நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கீழிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் தனது மனைவி சுகன்யா மற்றும் மூன்று வயது குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ராஜசேகர், டிக்டாக்குக்கு அடிமையான நிலையில் அதன் மூலம் தோழியான அறந்தாங்கியை சேர்ந்த கவிநயா என்ற பெண்ணுடன் சேர்ந்து வசிப்பதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சுகன்யா மனு அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கவிநயா வீட்டிலும் ராஜசேகர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பண்ருட்டி மகளிர் பொலிசார் ராஜசேகரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணையை முடித்து விட்டு அறந்தாங்கி காவல் நிலையத்தில் உள்ள வழக்கிற்காக அழைத்துச் சென்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்