அலறிய கணவன்! திருநங்கை மகனுடன் சேர்ந்து அடித்து கொன்ற மனைவி... வெளிவரும் திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தந்தையை இரண்டு மகன்கள் மற்றும் மனைவியே அடித்துக் கொன்றதும், அதற்கு தாயே உடந்தையாக இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் கிட்டப்பையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ்.

இருவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி தமது மகளுடன் வெளியூரில் தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி வனிதா, அவரது மகன்கள் குமரேசன், நந்தகுமார் ஆகியோருடன் சின்ராஜ் தனியாக வசித்து வந்தார். இரண்டாவது மகன் நந்தகுமார் திருநங்கை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டாவது மனைவி வனிதா தமது மகன்கள் இருவருடனும் அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். சின்ராஜ் மட்டும் கிராமத்திலேயே இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில்தான், மனைவி வனிதாவும், மகன்கள் இருவரும் வெளியூர்களுக்கு அடிக்கடி சென்று பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சின்ராஜ் இதுகுறித்து தட்டிக் கேட்ட போது, அவர்களுக்குள் பிரச்சினை வெடித்துள்ளது.

வெளியூர்களுக்கு சென்றுவிட்டு வரும்போதெல்லாம், தாயும், இரண்டு மகன்களும் மது அருந்திவிட்டு வந்து, சின்ராஜூடன் தகராறில் ஈடுபடுவதுடன், அவரை அடித்து உதைத்து துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், வழக்கம் போல வெளியூர் சென்றுவிட்டு தாயும் மகன்களும், மது போதையில் இரவு வீட்டுக்கு வந்துள்ளனர். சின்ராஜ் அவர்களை கண்டித்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த அவர்கள் சின்ராஜை அடிக்க அவர் அலறி துடித்தார், பின்னர் மின்சார வயரை கழுத்தில் சுற்றி இறுக்கி கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டது போல காட்டுவதற்காக, சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு, பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வனிதா மற்றும் அவரது மகன்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சின்ராஜை அவர்கள் அடித்து கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்