நான் தான் கொன்றேன்... புது மாப்பிள்ளை தற்கொலை சம்பவத்தில் நண்பன் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக நபர் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில், அவரை அவரின் நண்பரே அடித்து கொலை செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த ஒழுகைமங்கலத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் பக்கத்துவீட்டை சேர்ந்த ராகவி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவருக்கு விஸ்வாநாதன் என்ற நண்பர் உள்ளார். விஸ்வநாதன் பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 14-ஆம் திகதி விஸ்வநாதன், மணிமாறனை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அதன் பின் மறுநாள் காலை கழிவறைக்கு சென்ற போது, அங்கிருந்த மரத்தில் மணிமாறன் தலையில் காயத்துடன், தூக்கில் தொங்கியவாறு கிடந்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்போது எதுவும் தெரியாதது போன்று நடித்த நண்பர் விஸ்வநாதன் உடலை கீழே இறக்க உதவி செய்துவிட்டு அங்கிருந்து நழுவியுள்ளார்.

அன்றைய தினம் பொங்கல் பண்டிகை என்ற நிலையில் மணிமாறன் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் கருதியதால், இத்தகவலை பொலிசாருக்கு தெரிவிக்காத அவர்கள் மணிமாறன் உடலையும் இறுதி மரியாதை செலுத்தி தகனம் செய்துள்ளனர்.

இதையடுத்து விஸ்வநாதன், எருக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார், அப்போது அவர், மணிமாறனை தாம் கொலை செய்ததாக கூறி அதிர வைத்துள்ளார்.

சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் பாட்டிலால் தலையில் அடித்துக் கொன்று தற்கொலை போன்று இருப்பதற்காக மணிமாறனி உடலை தூங்கில் தொங்கவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது மனசாட்டி உறுத்தியதால் சரண் அடைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்