பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பிக்கு இளம்பெண் மீது தீவிர காதல்! இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் பாதுகாப்பு கேட்டு பொலிசில் இருவரும் தஞ்சமடைந்துள்ளனர்.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ராம் (26). இவர், பெண்ணாக பிறந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் ஆவார்.

இந்தநிலையில் ராமுக்கும், அவருடைய வீட்டின் அருகே வசித்து வரும் சரஸ்வதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக காதலித்து வந்தனர். இதற்கு சரஸ்வதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ராமும், சரஸ்வதியும் வீட்டை விட்டு வெளியேறி கோவையை அடுத்த சூலூர் வந்தனர். பின்னர் அவர்கள், அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து சில திருநம்பிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட னர்.

இதையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சூலூர் பொலிசில் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தது.

இதற்கிடையே சரஸ்வதியின் தாய், தனது மகளை காணவில்லை என்று வில்லிவாக்கம் பொலிசில் புகார் கொடுத்தது தெரிந்தது.

எனவே ராம் மற்றும் சரஸ்வதி ஆகியோரை சென்னை வில்லிவாக்கம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சூலூர் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்