பிச்சைக்காரனின் ஆங்கில புலமையை பார்ந்து அதிர்ந்த பொலிசார்! விசாரணையில் வெளியான நம்பமுடியாத உண்மை

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சாலையில் பிச்சையெடுத்து வந்த நபரின் ஆங்கில புலமையை பார்த்து பொலிசார் வியந்த நிலையில் அவர் பொறியாளர் என தெரியவந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகன்நாதன் கோவில் வாசலில் பிச்சையெடுத்து வருபவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா (51).

நேற்று இவருக்கும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் சாலையில் கட்டி புரண்டு அடித்து கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் மனுவை எழுத சொன்னார்கள்.

அப்போது பிச்சைக்காரன் சங்கர் சரளமான ஆங்கிலத்தில் தவறின்றி புகாரை எழுதியதை பார்த்து பொலிசார் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர்.

அவரிடம் இது குறித்து விசாரித்த போது சங்கரின் தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி என தெரியவந்தது.

மேலும் சங்கர் தான் ஒரு பொறியியல் பட்டதாரி எனவும் படித்து முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் பெரிய பணியில் இருந்ததாகவும் கூறினார்.

ஆனால் எதனால் பணியை விட்டு பிச்சை எடுக்கிறார் என அவர் கூறவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கர், அது என் தனிப்பட்ட விடயம், பணியில் இருந்த போது என் மூத்த அதிகாரிகளுடன் எனக்கு பிரச்சனை ஏற்பட்டது.

ஆனால் அது குறித்து விவரமாக என்னால் கூற முடியாது, அந்த பயம் மட்டும் என்னிடம் அப்படியே உள்ளது என கூறினார்.

சங்கர் மனநிலையில் கோளாறு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்