உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறி பாயும் காளைகள்! நேரலை வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
135Shares

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கு 2 கார்கள் வழங்கப்படவுள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது, காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ஒட்டுமொத்த தமிழகமே திரண்டு போராடி 2017-ல் மீட்டெடுத்தது. இந்தாண்டு போட்டியையொட்டி கடந்த சில மாதங்களாக காளைகளும், இளைஞர்களும் தயாராகி வந்தனர்.

இந்த நிலையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று உலக புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனைக் காண சுற்று வட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டை ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் கண்டு ரசிக்கின்றனர். அவர்களுக்காக சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சோழவந்தான் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது காளையை பங்கேற்க அழைத்து வந்திருந்தார். களம் கண்ட காளையை பிடிக்க மாடு வெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்த ஸ்ரீதர், அவரது காளை வந்தபோது கழுத்தில் கயிறு கட்டி இழுத்து செல்ல முற்பட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த வழியில் சென்ற மற்றொரு காளைமாடு முட்டியத்தில் வலது பக்க வயிற்றில் படுகாயம் அடைந்த ஸ்ரீதர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்