ரூ.1¾ லட்சம் கோடி ராணுவ தளவாடங்கள் உற்பத்தி... அமைச்சர் ராஜ்நாத்சிங்அறிவிப்பு!

Report Print Vijay Amburore in இந்தியா

50 டன் எடை கொண்ட கொண்ட கே 9 வஜ்ரா பீரங்கியை நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

2017 ஆம் ஆண்டில், மத்திய அரசின் “மேக் இன் இந்தியா” முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்திற்கு கே 9 வஜ்ரா டி 155எம்எம் ரகத்தை சேர்ந்த 100 பீரங்கிகளை 42 மாதங்களில் தயாரித்து கொடுப்பதற்கான பணி ஆணைகளை எல் அண்ட் டி நிறுவனம் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் இருந்து உத்தரவைப் பெற்றது.

உள்நாட்டில் பொருட்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தின் கீழ் 4500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்புத் துறை ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.

Twitter: Rajnath Singh

இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத் அருகே ஹசிராவில் லார்சன் அண்ட் டூப்ரோ கவச அமைப்புகள் வளாகத்தில், நேற்று ‘கே-9 வஜ்ரா-டி ஹோவிட்சர்’ துப்பாக்கியுடனான பீரங்கி வண்டி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பீரங்கியில் ஸ்வஸ்திக் குறியீடு பதித்ததுடன், குங்குமம் வைத்து, தேங்காய் உடைந்தது வழிபாடு நடத்தினார். அதன்பிறகு கொடியசைத்து துவங்கி வைத்த அவர், சிறிது நேரம் அதில் அமர்ந்து பயணித்தார்.

Twitter: Rajnath Singh

அப்போது பேசிய அவர், "நான் இன்று கே -9 வஜ்ரா-டி பார்த்தபோது, ஒரு வலுவான ஆயுதத்தைக் காண முடிந்தது. ஒரு வலுவான பாதுகாப்பான இந்தியாவையும் என்னால் காண முடிந்தது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்காலத்தில் நாட்டை நிகர ஆயுத ஏற்றுமதியாளராக மாற்ற அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தியா தொடர்ந்து ஆயுதங்கள் இறக்குமதியை சார்ந்து இருக்க முடியாது. இன்னும் 5 ஆண்டுகளில், 2025-ம் ஆண்டுக்குள் 26 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் கோடி) ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.

இது, இந்த துறையில் 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.70 ஆயிரம் கோடி) முதலீட்டையும், 20 லட்சம் முதல் 30 லட்சம் வரையில் வேலை வாய்ப்பினையும் கொண்ட திட்டம் ஆகும் எனக்கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்