கர்ப்பிணி மனைவியை கொலை செய்து அரவை இயந்திரத்தில் சடலத்தை அரைத்த கணவன்!

Report Print Vijay Amburore in இந்தியா

கர்ப்பிணி மனைவியை கொலை செய்து அவருடைய உடலை துடுகளாக நறுக்கி, அரவை இயந்திரத்தில் அரைத்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவீந்திர குமார் (35) - உர்மிளா என்கிற தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ளனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட ரவீந்திர குமார், கர்ப்பிணியாக இருந்த மனைவிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்கிற அச்சத்தில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் சமையல் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. உடனே ஊர்மிளா பொலிஸாருக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் வீட்டிற்கு வருகை தந்த பொலிஸார், ரவீந்திர குமாரை எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.

பொலிஸார் வீட்டிற்கு வந்ததை அவமானமாக கருதிய ரவீந்திர குமாரின் குடும்பத்தினர், ஊர்மிளாவை கொலை செய்த முடிவு செய்துள்ளனர்.

ஜனவரி 4ம் திகதியன்று ரவீந்திர குமார் (35), அவரது தந்தை கரம் சந்திரா மற்றும் சகோதரர்களான சஞ்சீவ் மற்றும் பிரிஜேஷ் ஆகியோர் சேர்ந்து ஊர்மிளாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

அதன்பிறகு அவருடைய உடலை துண்டுகளாக நறுக்கி, அரவை இயந்திரத்தில் அரைத்துள்ளனர்.

எஞ்சியவற்றை வீட்டிலிருந்து 4கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு கொண்டு சென்று எரித்துள்ளனர். பின்னர் மனைவியை காணவில்லை என ரவீந்திர குமார் பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பொலிஸாரும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்

இதற்கிடையில் தம்பதியினரின் மூத்த மகள், தனது தந்தையின் குடும்பத்தினர் சேர்ந்துதான் கொலை செய்தனர் என ஊர்மிளாவின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உர்மிளாவின் சகோதரி வித்யா தேவி, பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், ஆறு குழுக்கள் அமைத்து தப்பி ஓட முயன்ற 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்