நேரலை நிகழ்ச்சியில் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்: அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

சினிமா பட பாணியில் இந்தியாவை சேர்ந்த ஒருவர், தனது காதலியை கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் வடக்கு நகரமான சண்டிகரில் உள்ள நியூஸ் 18 அலுவலகத்தின் ஸ்டுடியோவுக்குள் சென்ற மனிந்தர் சிங் (27) என்கிற நபர், அங்கிருந்த கேமராமேனிடம் கொலைக்குற்றத்தை 'ஒப்புக்கொள்ள' விரும்புவதாகக் கூறியுள்ளார்.

பின்னர் அவர் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது ஒப்புதல் வாக்குமூலம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் கூறிய மனிந்தர் சிங், நான் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது காதலி சர்ப்ஜித் கவுரின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனால் டிசம்பர் 30 அன்று அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டேன்.

எனது குடும்பத்தினரை பொலிஸார் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாலே தற்போது வாக்குமூலம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், விரைந்து சென்று மனிந்தர் சிங்கை கைது செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அண்டை மாநிலமான ஹரியானாவில் சிங் மற்றொரு காதலியைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். கவுர் கொல்லப்பட்ட நேரத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

அனுதாபத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அந்த நபர் தனது வாக்குமூலத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியிருக்கலாம்.

"ஒரு வழக்கறிஞரை ஈடுபடுத்த பணம் இல்லாததால் சில வழக்கறிஞர்கள் தாமாக முன்வந்து தனது வழக்கை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்பியிருக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்