ஜல்லிக்கட்டு போட்டியின் போது பெண்ணை வேகமாக முட்டிய காளை! உயிரிழந்த பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் திருச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளை முட்டியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் 400க்கும் மேற்றபட்ட காளைகள் பங்கேற்றன.

காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் ரசித்து வந்தனர்.

இந்த நிலையில் சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உறையூர் பகுதியை சேர்ந்த ஜோதிலட்சமி என்ற பெண்ணை மாடு முட்டியதில் அவர் படுகாயமடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதிலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்