திருமணமான சில வாரத்தில் தாய் வீட்டுக்கு தனியாக வந்த புதுப்பெண்! அங்கு அவரை பார்த்து அழுது கதறிய குடும்பத்தார்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான சில வாரத்தில் பெற்றோர் வீட்டுக்கு வந்து புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை அடுத்த பாந்துப் பகுதியை சேர்ந்தவர் மணிஷா செல்கே (30). இவருக்கு சமீபத்தில் சாய்பிரசாத் வசந்த் செல்கே என்பவருடன் திருமணமானது.

திருமணமான நாள் முதலேயே சாய்பிரசாத் மற்றும் அவர் பெற்றோர் மணிஷாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பெற்றோர் வீட்டுக்கு போன் செய்த மணிஷா தனது சகோதரர் மயூரிடம், கணவர் மற்றும் குடும்பத்தார் தன்னை கொடுமைப்படுத்துவதாக அழுதுள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற மயூர், சகோதரி மணிஷாவை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

அங்கு வந்த பின்னரும் அழுது கொண்டே இருந்த மணிஷா தனது அறையில் தூக்கு போட்டு கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பெற்றோர் மற்றும் மயூர் கதறி அழுதபடியே மணிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இது குறித்து விசாரணையை தொடங்கிய பொலிசார் மணிஷா தூக்கு போட்டு கொண்ட அறையில் இருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றினார்கள்.

அதில், என் சாவுக்கு காரணம் என் கணவர் மற்றும் மாமனார், மாமியார் தான். அவர்கள் என்னை வரதட்சணை கேட்டு மிகவும் கொடுமைப்படுத்தினார்கள் என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து பொலிசார் மணிஷா கணவர் சாய்பிரசாத் மற்றும் அவர் பெற்றோரை கைது செய்தனர்.

இது குறித்து மணிஷாவின் சகோதரர் மயூர் கூறுகையில், கணவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்துவதாக அடிக்கடி என்னிடம் போனில் மணிஷா சொன்னார்.

அவரை ஆறுதல்ப்படுத்த வீட்டுக்கு அழைத்து வந்தேன், ஆனால் இங்கு வந்து இப்படியொரு முடிவை அவர் எடுத்தது அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்