வரலாற்று சிறப்பு வாய்ந்த பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது! நேரலை வீடியோ காட்சிகள்

Report Print Fathima Fathima in இந்தியா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றதும் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சீறிவரும் காளையை அடக்க வீரர்கள் களத்தில் காத்திருக்க, இதனை கண்டுரசிக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டிருக்கின்றனர்.

காளையை அடக்கும் வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காத காளைக்கும் தங்கம், வெள்ளி முதல் பீரோ வரை பரிசுப்பொருட்கள் காத்திருக்கின்றன.

அத்துடன் ஆயிரக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், மருத்துவ குழுவினரும் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்