மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் ஹைதரபாத் மாநிலத்தில் பிறந்த சத்யா நாதெல்லா 2014ஆம் ஆண்டில் இருந்து மைக்ரோசஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.
இந்தியாவில், சிஏஏக்கு எதிரான போராட்டங்கள் வலுத்தும் வரும் சூழலில், தற்போது அமெரிக்காவில் குடியேறியுள்ள நாதெல்லா தனது கருத்தை வெளிபடுத்தியுள்ளார்.
முதலில், சத்யா நாதெல்லா குறிப்பிட்டதாக buzzfeed new நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் பென் ஸ்மித் டிவிட் ஒன்றை வெளியிட்டார்.
அதில் “என்ன நடக்கிறது என்பதை குறித்து நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இது மிக மோசமானது. வங்க தேசத்தில் இருந்து புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு வந்த மிகப்பெரிய சாதனையாளராகவே வரவுள்ள ஒருவரை நான் காண விரும்குகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
Statement from Satya Nadella, CEO, Microsoft pic.twitter.com/lzsqAUHu3I
— Microsoft India (@MicrosoftIndia) January 13, 2020
மைப்ரோசம்ஃப்ட் இந்தியா சார்பாக நாதெல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஒவ்வொரு நாடும் அதன் எல்லைகளை வரையறுத்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும். இதற்கேற்றக் கொள்கையை அமைக்கும். ஜனநாயக நாடுகளில், இது மக்களுக்கு அவர்களது அரசாகங்களும் சேர்ந்து அந்த எல்லைகளை விவாதித்து வரையறுக்க வேண்டிய ஒன்று.
நான் எனது இந்திய பாரம்பரியத்தை கட்டமைத்துக் கொண்டேன். பல கலாச்சாரங்கள் நிலவும் இந்தியாவில் வளர்ந்து வந்துள்ளேன். மேலும், அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த அனுபவம் எனக்கு உள்ளது.
புலம்பெயர்ந்த ஒருவர் ஒரு வளமான தொடக்கத்தை கண்டுபிடிக்க வேண்டும். அல்லது இந்திய சமுதாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பெருமளவில் பயனளிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழி நடத்த விரும்பும் இந்தியனாக இருப்பதே எனது நம்பிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிஏஏக்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், சத்யா நாதெல்லாவின் இந்த கருத்து டிவிட்டரில் வரவேற்பை பெற்றுள்ளது.