உன்னை கட்டிப் பிடிக்க நினைத்தேன்! இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய நடிகர்: வெளியான ஓடியோ

Report Print Santhan in இந்தியா

ஆந்திராவில் திருப்பதி தேவஸ்தான் தொலைக்காட்சியின் பணிபுரியும் பெண் ஊழியரிடம் காமெடி நடிகரும், தொலைக்காட்சியின் தலைவருமான பிரித்திவ்ராஜ் ஆபசமாக பேசிய ஓடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானதால், முதல்வர் உத்தரவின் பேரில் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயில் வைபவம் மற்றும் உற்சவங்கள் இந்து தர்ம பிரசாரத்திற்காக கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி என்ற பெயரில் தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட்டது.

இதன் தலைவர் ஆளும் கட்சி சார்பில் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஜெகன்மோகன் அரசு பதவியேற்ற பிறகு தெலுங்கு திரைப்பட காமெடி நடிகர் பிரித்திவ்ராஜ், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தலைவராக நியமிக்கப்பட்ட பின் அவர் தனக்கு வேண்டியவர்கள் சுமார் 36 பேரை பணியில் அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டதால்,தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

இதையடுத்து தற்போது பிரித்திவ்ராஜ், குறித்த தொலைக்காட்சியில் இருக்கும் பெண் ஊழியரிடம் மிகவும் ஆபசமாக பேசிய ஓடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், பிரித்திவ்ராஜ், நீ என் இதயத்தில் இருக்கிறாய், ஐ லவ் யூ, நான் மது அருந்துவதை நிறுத்திவிட்டேன், மது அருந்த வேண்டும் என்று நினைத்தால் அது உன்னுடன் இருக்கும்போது தான் என்று முடிவு செய்துள்ளேன்.

தொலைக்காட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது உன்னை கட்டிப்பிடிக்க நினைத்தேன், ஆனால் நீ சத்தம் போடுவாய் என்ற பயத்தில் நான் செய்யவில்லை என்று பேசியுள்ளார்.

ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள பிரித்திவ்ராஜ், தற்போது பெண் விவகாரத்தில் சிக்கியுள்ளதால், அவர் அந்த பதவியில் இருக்க கூடாது என்று பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் ஆந்திராவில் விஸ்வரூபம் எடுக்க, முதல்வர் ஜெகன் மோகன் அவரை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். இதை யடுத்து நேற்று மாலை அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்