மேலதிகாரிகளால் எனக்கு பாலியல் தொல்லை... உதவிகேட்டு அழுத பெண் காஸ்டபிள் வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

மேலதிகாரிகளால் தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பட்டு வருவதாக லக்னோவை சேர்ந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் அழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

லக்னோவில் ரிசர்வ் பொலிஸ் பிரிவில் வேலை செய்துவரும் பெண் கான்ஸ்டபிள் ஒருவர், மேலதிகாரிகள் தனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுப்பதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "நான் எனது சொந்த காவல் துறையில் பாதுகாப்பாக இல்லாதபோது மற்ற பாதிக்கப்பட்ட பெண்களை எவ்வாறு ஆறுதல்படுத்த முடியும்? நானே பாதிக்கப்பட்டிருக்கும் போது, மற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வது பற்றி எப்படி யோசிக்க முடியும்? பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக எனக்கே நீதி கிடைக்கவில்லையே? என பேசியுள்ளார்.

லக்னோவில் உள்ள மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் மக்கள் தொடர்பு அதிகாரி, அந்த அதிகாரியைச் சந்தித்து புகார் அளிக்க அனுமதிக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு மக்கள் தொடர்பு அதிகாரி ஆதரவளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வீடியோ வியாழக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் அதிரடி காட்ட ஆரம்பித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகளை விசாரித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு எஸ்.பி. தரவரிசை அதிகாரி ருச்சிதா சவுத்ரிக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்