30 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு ஓடிய நபர்! தமிழக காவல்துறை கொடுத்த நெகிழ்ச்சி

Report Print Abisha in இந்தியா

சதீஸ்கர் மாநிலத்தில் இருந்து 30ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு ஓடிய நபர் உறவினர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழக மாவட்டமான பெரம்பலூர் காப்பகத்தில் தங்கியிருந்த கவுசரண் குறித்து மாநில குற்றபிரிவு போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், சதீஸ்கர் மாநில பொலிசாரை தொடர்பு கொண்டு குடும்ப உறுப்பினர்களை கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பொலிசாரிடம் பேசிய கவுசரண் சகோதரர், அவர் எங்கள் அண்ணன்தான். குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு சென்றுவிட்டார். 30ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் தவித்து வந்தோம். ஆனால், அவர் உயிருடன் இருந்தால் என்றாவது திரும்புவர் என்ற நம்பிக்கை இருந்தது.

அதனால், இந்த செய்தி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால், அவரது மனைவி மற்றொருவரை திருமணம் செய்து கொண்டார். எங்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எங்களுக்கு தமிழ் தெரியாது. நாங்கள் தமிழகம் வந்தால் யாரும் உதவமாட்டார்கள். படிபறிவும் எங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

உடனே தமிழக பொலிஸ் அதிகாரி தன்னுடைய எண்ணை வழங்கி தமிழகம் வந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்த அவர்களை, பொலிசார் பெரம்பலூர் காப்பகத்தில், சென்று கவுசரணை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

30ஆண்டுகளுக்கு பின் சந்தி அவர்கள் கட்டி அணைத்து அழுத்தனர். பின் குடும்ப விடயங்கள் பற்றி பரிமாறி கொண்டு கவுசரணை அழைத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பினர்.

வடமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கௌசரண் எப்படி வந்தார் என்று பெரம்பலூர் மாவட்டம், தோரமங்கலத்தில் செயல்படும் காப்பக நிர்வாகி அருண் தெரிவித்ததாவது, ``கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் சாலையில் சுற்றித்திரிந்த கவுசரணை எங்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

அப்போது அவரை பாபுசிங் என்று அழைத்தோம். மனநல பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. அப்போதுதான் தன்னுடைய பெயரை கவுசரண் என்றும், தன்னுடைய முகவரியையும் எங்களிடம் கூறினார்.

இதையடுத்து மாநில குற்றப்பிரிவு பொலிஸார் மூலம் கவுசரணின் உறவினர்களைக் கண்டுபிடித்தோம். 4 ஆண்டுகளுக்கு முன் கவுசரண், எங்கு இருந்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அதுகுறித்து கவுசரணுக்கும் சொல்லத் தெரியவில்லை.

30 ஆண்டுகளுக்குப் பிறகு கவுசரணை அவரின் தம்பிகள் மற்றும் உறவினர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது கவுசரணை ஒவ்வொருவரும் கட்டிப்பிடித்து இந்தியில் கண்ணீர்மல்க நலம் விசாரித்தனர். எங்கள் காப்பகத்தில் தங்கியிருந்த 4 ஆண்டுகளில் கவுசரண் தமிழில் நன்றாக பேசக் கற்றுக்கொண்டார்" என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்