அப்பா கூட வந்துடும்மா... என்னை எட்டி உதைச்சிட்டியே... திருமணம் செய்து கொண்ட மகளால் தந்தைக்கு நடந்த சோகம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி (47). இவரின் மகள் திவிதாவும், ஷாம் (20) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு காதலுக்கு திவிதா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 2ஆம் திகதி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய திவிதா காதலனை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் மகள் காணாமல் போனது குறித்து ரவி பொலிசில் புகார் கொடுத்த நிலையில், திவிதா தனது காதல் கணவர் ஷாமுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தனக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார்.

பின்னர் பொலிசார் திவிதா பெற்றோரை அழைத்து பேசினர்.

அப்போது மணக்கோலத்தில் திவிதாவும் ஜோடியாக வந்தார். மகளைப் பார்த்ததும், ரவி கண்கலங்கி அழுதுள்ளார்.

பின்னர் மன உளைச்சலுடன் வீடு திரும்பிய ரவி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசினோம்.

அப்போது, என் கூட வந்துடும்மா என கூறி திவிதாவின் காலில் விழுந்து தந்தை ரவி கதறி அழுதார். அந்த பெண் நகர்ந்தபோது, கால் ரவியின் முகத்தில் பட்டது.

அப்பாவையே எட்டி உதைக்கிறீயா என்று கூறி வருத்தப்பட்டுக்கொண்டு சென்ற அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்