கால்வாயில் அரை நிர்வாண கோலத்தில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்!

Report Print Vijay Amburore in இந்தியா

வேலூர் அருகே அரைநிர்வாண கோலத்தில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பெண் இளஞ்சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்ததோடு, பாப் கட்டிங் செய்திருந்தார். அரை நிர்வாண ஆடையில் கிடந்ததால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாரா என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், மீட்கப்பட்ட இளம்பெண் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும், இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...