லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையாவின் சொத்துக்கள் விற்கலாம்: நீதிமன்றம் உத்தரவு

Report Print Abisha in இந்தியா

விஜய் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் விற்றுக்கொள்ளலாம் என்று மும்பை தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் வங்கிகளில் இருந்து 9ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திரும்பிச் செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

பிரித்தானியாவில் தஞ்சமடைந்த அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார். அவரை தப்பியோடியா பொருளாதார குற்றவாளியாக கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பண மோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.

விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கிய வங்கிகள் 2013ஆம் ஆண்டிலிருந்து அவர் வழங்க வேண்டிய பணத்தில் 11.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.6,203.35 கோடியை திரும்ப பெற அவரது சொத்துகளை பயன்படுத்தி கொள்ள அனுமதி கோரியது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு ஒன்றினால், பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் சொத்துகளை கலைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியிருந்தது.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று மும்பை தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா தரப்புக்கு 18ஆம் திகதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...