சிக்கன் குழம்பை சாப்பிட்டு உயிருக்கு போராடிய போது தண்ணீர் கேட்ட கணவன்! சயனைட் கலந்து கொடுத்த மனைவி

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் கணவர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொலை செய்த பெண் வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோழிக்கோட்டில் உள்ள கூடத்தை கிராமத்தை சேர்ந்த ஜோலி (47) என்ற பெண் கடந்த 14 ஆண்டுகளில் தன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொலை செய்துள்ளார்.

2002ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆண்டுக்குள் தனது முதல் கணவர், இரண்டாம் கணவரின் முதல் மனைவி உள்ளிட்டோரை அவர் கொன்றார்.

பணம், ஆடம்பர உல்லாசத்திற்கு ஆசைப்பட்டே ஜோலி இந்த கொடூர செயல்களை செய்தார்.

இந்நிலையில் ஜோலி வழக்கில் சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 1800 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தாமரசேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இதில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜோலியின் இரண்டு குழந்தைகள் உட்பட 246 சாட்சிகள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜோலி தனது கணவரை எப்படி இரக்கமின்றி கொலை செய்தார் என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது சிக்கன் குழம்புடன் சயனைடை கலந்து ஜோலி, கணவருக்கு கொடுத்துள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் பொலிசார் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சயனைட் கலந்த குழம்பை சாப்பிட்ட கணவர் உயிருக்குப் போராடிய போது ஜோலியிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.

இதையடுத்து ஜோலி தான் கொடுத்த தண்ணீரிலும் சயனைடை கலந்ததாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...