லட்சம் ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு சாதித்து காட்டி தமிழ் பெண்... எதில் தெரியுமா? குவியும் பாராட்டு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் லட்சக்கணக்கில் சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு, தன்னுடைய முதல் முயற்சியில் இளம் பெண் ஒருவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் குரூப் 1 தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேர்காணலுக்கு 362 பேரின் பட்டியல் வெளியானது. இதில் 257 பேர் பெண்கள்.

அதிலும் குறிப்பாக அர்ச்சனா என்ற பெண் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் கல்லூரி வளாக நேர்காணலிலேயே, தேர்ச்சி பெற்று தனியார் ஐ.டி. நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவரின் சம்பளம் சுமார் 1 லட்சம் ரூபாயும் தாண்டி இருந்தது.

ஆனால், அரசுப் பணியின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது பணியை ராஜினாமா செய்த இவர், அரசு தேர்வான குரூப்-1 தேர்வுக்கு தயாரானார்.

அதன் படி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தன்னுடைய முதல் முயற்சியிலே அர்ச்சனா தேர்ச்சி பெற்றுள்ளதால், அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அர்ச்சனா இந்த தேர்விற்காக, நாள் ஒன்றிற்கு 10 மணி நேரம் தயாரானதாகவும், அதுமட்டுமின்றி என்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பும்,

முறையான பயிற்சியும் உதவிகரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...