கல்யாணம் பண்ணிக்கோடானு கெஞ்சினேன்... ஆனால் அவனோ? இளம் பெண் சொன்ன கண்ணீர் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காவலரை காதலித்த பெண் ஒருவர், அவரால் ஏமாற்றப்பட்டதால் சேர்த்து வைக்கும் படி மிகவும் வேதனையுடன் கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சரஸ்வதி, அழகுக்கலை நிபுணராக உள்ளார். இவர் கமிஷ்னர் அலுவலகம், மகளிர் ஆணையம் மற்றும் காவல்நிலையம் ஆகிய இடங்களில் பொலிசார் ஒருவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்து வருகிறார்.

ஆனால் பொலிசார் அதைப் பற்றி கண்டுகொள்வதே என்று மிகவும் வேதனையுடன், பிரபல தமிழ் ஊடகமான விகடனில் கூறியுள்ளார். அதில் அவர் தொடர்ந்து கூறுகையில், என்னுடைய அப்பா கூலித் தொழிலாளியாக உள்ளார்.

காவலர் தேர்வுக்கான பயிற்சியின் போது வீரமணி என்பவர் எனக்கு அறிமுகமானார். அவரின் பேச்சைக் கேட்டு, அவரை காதலித்தேன். அவருக்கு காவலர் பணி கிடைத்ததால், மிகவும் சந்தோஷமடைந்தேன்.

வீரமணியுடன் சரஸ்வதி/விகடன்

ஆனால் வேலைக்கு சென்ற பின்னர் வீரமணியின் நடவடிக்கைகள் எல்லாம் மாறிவிட்டன. அவர் என்னிடம் போனில் கூட பேசுவதில்லை. நாங்கள் காதலித்த போதே கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டோம், இப்போது எங்கள் வீட்டில் வசிதி இல்லை என்பதற்காக வீரா வீட்டில் திருமணத்திற்கு தடை போடுகிறார்கள்.

காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு வந்தாலும் காதலித்த பெண்ணை கைவிடக் கூடாது. என்னைப் பதிவுத் திருமணம் செய்துகொள்ளும்படி வீராவிடம் கூறியபோது அவர் சம்மதிக்கவில்லை, வீராவின் அப்பா காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி, வீரா மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், கடந்த 31.05.2019 புளியந்தோப்பு மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வீராவை அழைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

வீரமணி/ விகடன்

அப்போது வீரர் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார், ஆனால் மகளிர் ஆணையத்தில் வேறுவிதமாக பேசுகிறார். நான் விசாரணைக்காக சென்ற போது, அப்போது என்னை வழி மறித்த வீரர் இனிமேலும் நீ புகார் கொடுத்தால் ரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்.

இதனால் என் குடும்பத்தினருக்கும், என்னுடைய உயிருக்கும் ஆபத்து உள்ளது, மருத்துவபரிசோதனைக்கு நான் தயாராக இருக்கிறேன், ஒரு பெண்ணாக நான் காதலித்தது தப்பா என்று வேதனையுடன் கூறி முடித்தார்

மேலும் வீரமணி சரஸ்வதியை திருமணம் செய்ய சம்மதித்தாலும், சரஸ்வதி வீரமணி என்னை திருமணம் செய்தாலும் என் வாழ்க்கைக்கு அவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்