கோலமிட்டு போராட்டம் நடத்திய திருமாவளவன்

Report Print Fathima Fathima in இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோலம் போட்டு போராட்டம் நடத்தியுள்ளார்.

அவரின் 20 நிமிட முயற்சியில், 4 வண்ணத்துப்பூச்சிகளின் நடுவே No CAA என்ற எழுத்துகள் வரும் வகையில் அந்த கோலம் அமைந்திருந்தது. கோலத்தை தொடர்ந்து கண்டன முழக்கமும் எழுப்பப்பட்டது.

அவர் கூறுகையில், இது அறவழி போராட்டமே, மார்கழி மாதத்தில் மீதமிருக்கும் நாட்களை NO CAA, No MODI என்ற கோல வழி போராட்டத்தை மக்கள் தொடர வேண்டும்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து, ஆங்கில புத்தாண்டு, தமிழர் திருவிழாவை விசிக புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...