பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தது போன்று பேசிய நபர்... ஆதரவு தெரிவித்த சீமான்!

Report Print Abisha in இந்தியா

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த மசோதவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணனுக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட நெல்லை கண்ணன் “ அமித்ஷாவின் கதையை முடித்தால்... பிரமர் மோடியின் கதையும் முடிந்துவிடும்” என்று பேசினார்.

இது பாஜக தொண்டர்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது பல வழக்குகள் பாய்ந்துள்ளன.

இந்நிலையில், நெல்லை கண்ணனுக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். தனது டிவிட்ட பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர் “ பெருமதிப்பிற்குரிய அப்பா தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே!

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, மதத்தால் நாட்டை துண்டாட முயலும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம். அது வன்முறையைத் தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது.

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து!”

என்று தெரிவித்துள்ளார். இது சிஏஏ-க்கு எதிராக போராட்டத்தை தூண்டலாம் என்று கருத்து நிலவுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்