இலங்தை அகதிகள் முகாமில் நுழைந்து நேர்காணல் செய்த பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Basu in இந்தியா

இலங்கை அகதிகளை நேர்காணமல் செய்ததற்காக, விகாடன் குழுமத்தைச் சேர்ந்த நிருபர் மற்றும் புகைப்பட பத்திரிகையாளர் ஆகிய இருவர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை நேர்காணல் செய்ததற்காகவும், சிஏஏ-என்ஆர்சி பிரச்சனையில் அவர்களின் பார்வையிலிருந்து செய்தி எழுதியதற்காகவும் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விகாடன் குழுமத்தைச் சேர்ந்த நிருபர் மற்றும் புகைப்பட பத்திரிகையாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை), 447 (கிரிமினல் அத்துமீறல்) மற்றும் 505-1 பி (பீதி அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்தி வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இருவரும் ஒரு அகதி முகாமில் நுழைந்து சிஏஏ- க்கு எதிராக போராட்டம் நடத்த அகதிகளை தூண்டினர் என்று எப்.ஐ.ஆர்-ல் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜாமீனில் வெளிவராத குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ய முயற்சித்து வருகின்றனர்.

ஜனநாயக நாட்டில் பத்திரிகைகள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊடக நபர்கள் மீதான வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கமல்ஹாசனின் மக்கல் நீதி மய்யம் கட்சியும் மாநில அரசின் நடவடிக்கையை கண்டித்துள்ளது, மேலும் ஜாமீனில் வெளிவராத குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும் கோரியுள்ளது.

அதேபோல், சில பத்திரிகையாளர்கள், மாநில காவல்துறைத் தலைவரைச் சந்தித்து இருவர் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...