செத்துவிடுவேன் போல இருக்கு, என்னை காப்பாற்று என மனைவியிடம் கெஞ்சிய கணவன்... அடுத்து நடந்த பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டேன் எனவும் தன்னை காப்பாற்றுமாறும் மனைவியிடம் கெஞ்சிய கணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் டீக்கடையில் வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி நிர்மலா (47). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 2 பேரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள்.

மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி நிர்மலாவிடம் தகராறு செய்வாராம்.

அந்த சமயத்தில், இந்த உலகத்தில் இருப்பதை விட சாவதே மேல் என்று சொல்வாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் ராஜேந்திரன் வழக்கம் போல் மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த மனைவியிடம், ஒருவித பதற்றத்துடன் பேசியுள்ளார். அதாவது, மதுபோதையில் விஷ மாத்திரை தின்று விட்டேன், செத்து விடுவேன் போல் இருக்கிறது. எனவே, தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சினார். அதே சமயத்தில், அங்கேயே திடீரென மயங்கியும் விழுந்தார்.

உடனே நிர்மலா, தன்னுடைய தம்பி விஜயகுமாருடன் சேர்ந்து கணவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...