50-க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த நபர்! சோக சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதால், பேருந்தை ஓரத்தில் நிறுத்திவிட்டு உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். 50 வயதான இவர் சங்கராபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சங்கராபுரம் - மல்லாபுரம் செல்லும் பேருந்தை இயக்கி வந்த இவர், பிற்பகல் உள்ளூர் நேரப்படி 2:00 மணியளவில் மல்லாபுரத்திலிருந்து சங்கராபுரம் சென்று கொண்டிருந்தபோது தேவபாண்டலம் அருகே திடீரென பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு, ஸ்டியரிங்கில் பாண்டியன் மயங்கி விழுந்தார்.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் கண்ட்ரக்டர் ஆம்புலன்ஸ் முலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் பாண்டியனை சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே பாண்டியன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். நெஞ்சு வலியிலும் பேருந்தை ஓரமாக நிறுத்தி 50-க்கும் மேற்பட்ட பயணிகளைக் காப்பாற்றி, உயிரை விட்ட டிரைவரை நினைத்து பயணிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

உயிரிழந்த பாண்டியனுக்கு 40 வயதில் மனைவியும், 6 வயதில் மகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...