லாட்ஜில் ரூம் எடுத்த இளைஞன் செய்த மோசமான செயல்.... சிசிடிவி கமெராவில் கண்டுபிடித்த சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் இளைஞர் ஒருவர் லாட்ஜில் ரூம் எடுத்து தங்குவது போல் நடித்து, அங்கிருந்த விலை மதிப்புமிக்க எல்.இ.டி டிவியை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விழுப்புரத்தின் 4 முனை சந்திப்பு அருகே கே.வி.ஆர். என்ற தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை , கையில் காலிப் பெட்டியுடன் வந்த இளைஞர் ஒருவர், ஆதார் அட்டையை காண்பித்து அறை எடுத்துள்ளார்.

அதன் பின், அறைக்கு சென்ற அவர், சிறிது நேரத்திலேயே அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறைக்கு திரும்பவில்லை.

இதனால் அங்கிருந்த ஊழியர்கள் தங்களிடம் இருந்த மாற்றுச் சாவி மூலம் ஊழியர்கள் அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது சுமார் 15,000 ரூபாய் மதிப்பிலான 22 இன்ச் எல்.இ.டி டிவி திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்த போது, கையில் பெட்டியுடன் வந்த இளைஞன், குறித்த பெட்டியின் உள்ளே டிவியை மறைத்து வைத்து கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த இளைஞன் கொடுத்த ஆதார் அட்டை போலியான் ஆதார் அட்டை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்