பயணிகளுடன் கொளுத்தப்பட்ட பேருந்து: கொளுத்தியது பொலிசார் என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Report Print Arbin Arbin in இந்தியா

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ள நிலயில் டெல்லியிலும் தீவிரமடையும் போராட்டத்தில் அரசு பேருந்துகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் சில மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலயில் டெல்லியில் தீவிரமடையும் போராட்டத்தின் எதிரொலியாக டெல்லி பாரத் நகர் பகுதியில் இன்று மாலை அரசு பேருந்துகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. பிறபகுதிகளில் சில தனியார் வாகனங்களும் எரிக்கப்பட்டன.

போராட்டக்காரர்கள் பேருந்துகளை பயணிகளுடன் கொளுத்தியதாக தகவல் பரவிய நிலையில், அரசு பேருந்துகளை பொலிசாரே கொளுத்தியதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதை உறுதி செய்யும் சில காணொளி காட்சிகளும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களே குறித்த காணொளிகளை வெளியிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அறவழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சில விஷமிகள் திடீரென்று பேருந்துகளை கொளுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்