குடியுரிமை கிடைக்காது என்கிற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட புலம்பெயர்ந்த பெண்

Report Print Vijay Amburore in இந்தியா

இந்திய குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை எவ்வாறு சேகரிப்பது என்கிற அச்சத்தில் மேற்கு வங்கத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு வந்த 36 வயதான ஷிப்ரா ஷிக்தார் என்கிற பெண், சனிக்கிழமை அதிகாலை ஜூகிராமில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது இந்திய குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை எவ்வாறு சேகரிப்பது என்கிற கவலையில் இரண்டு இரவுகளை கழித்த பின்னர், அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

The Telegraph

ஷிப்ரா முன்னர் வங்கதேசத்தில் பாரிஷாலில் வசித்து வந்தவர் என்றும், 1990 ல் தனது மகன் கமல் பிறந்த சிறிது காலத்திலேயே கணவர் சுபாஸுடன் இந்தியா வந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தால், இரண்டு நாட்களாக அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர், "எங்களிடம் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகள் உள்ளன. ஆனால் இப்போது, ​​இவை எங்களை காப்பாற்ற போதுமானதாக இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்," எனக்கூறியுள்ளார்.

ஜூகிராம் பகுதியில் 2000க்கும் அதிகமான வங்கதேச புலம்பெயர்ந்தோர் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்.

அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து 13 லட்சம் இந்துக்கள் விலக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்ததும், அவர்கள் அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்