சேமித்து வைத்த பணத்தை பேரன்களுக்கு கொடுக்க நினைத்த போது அதிர்ச்சியடைந்த மூதாட்டிகள்! அதில் ஒருவர் மரணம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பேரன், பேத்திகளுக்காக பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணம் செல்லாது என கூறப்பட்டதால் இரண்டு பாட்டிகள் அதிர்ச்சியடைந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தின் பூமலூரை சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் (75) மற்றும் தங்கம்மாள் (70).

கணவரை இழந்த இவர்கள் தங்களின் மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போக, மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டதால், மகன்கள் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் இருவரும் தங்களிடம் பணம் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து இருவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த ரூபாய் 46 ஆயிரத்தை கொடுக்க, அதைக் கண்ட மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏனெனில் அந்த பணம் எல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள்,

பல ஆண்டுகளாக சிறுக, சிறுக இறுதி காலத்தில் பேரன், பேத்திகளுக்காக கொடுக்க சேர்த்து வைத்த பணம், செல்லாது என்று கூறியது இருவரையும் வேதனையில் ஆழ்த்தியது.

இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த மூதாட்டிகளுக்கு, தொண்டு நிறுவனம் சார்பாக ரூபாய் 46 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த தங்கம்மாள், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்