பிரபல நடிகை அதிரடி கைது... பேஸ்புக் வீடியோவால் நேர்ந்த கதி

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து ஆட்சேபணைக்குரிய கருத்து கூறியதாக பிரபல மொடலும் நடிகையுமான பாயல் ரோஹத்கியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாயல், இன்று டிசம்பர் 15ம் திகதி ராஜஸ்தானில் பண்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. மம்தா குப்தா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவிற்காக கடந்த அக்டோபர் மாதம், ராஜஸ்தானில் பாயல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குறித்த வீடியோவில், பாயல் மோதிலால் நேருவின் குடும்பத்திற்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்களைத் தெரிவித்தார், மேலும் ஜவஹர்லால் நேருவின் மனைவியையும் அவதூறு செய்தார் என புகார் அளிக்கப்பட்டது.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் சார்மேஷ் சர்மா புகார் அளித்ததை அடுத்து, ஐடி சட்டத்தின் 66 மற்றும் 67 பிரிவுகளின் கீழ் பாயல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கேள்விக்குரிய வீடியோ செப்டம்பர் 21 அன்று பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. வீடியோவின் உள்ளடக்கம் மற்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவை பாதிக்கக்கூடும் என்று புகார் கூறினார்.

இந்நிலையில், இன்று தன்னை குஜராத் பொலிஸ் கைது செய்ததாக பாயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்