நள்ளிரவில் காயங்களுடன் வயலில் கிடந்த இளம்பெண்ணின் சடலம்

Report Print Vijay Amburore in இந்தியா

வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்ற பெண், நள்ளிரவில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் குப்புசாமி என்பவருக்கும் அவருடைய மனைவி சசிரேகாவிற்கும் 23 வயதில் கவுசிகா என்ற மகள் இருந்தார்.

கவுசிகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பூசிகா என்கிற மகள் இருக்கிறார்.

திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதைப்பற்றி பலமுறை கவுசிகா தன்னுடைய பெற்றோரிடம் கூறிவந்துள்ளார்.

சமீபத்தில் கூட இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கவுசிகா தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் இரவு வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறி, கவுசிகா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளார்.

அப்போது கவுசிகா, மயங்கிய நிலையில் வயல்பகுதியில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் கவுசிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கவுசிகாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தங்களுடைய மகளின் முகம், கைகால்களில் காயங்கள் இருப்பதால் யாரேனும் அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்