சனிக்கிழமை அன்று டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 1,300கோடி மதிப்பிலான போதை பொருளுடன் 9பேரை கைது செய்துள்ளனர்.
டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில், 20 கிலோ அளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றி உள்ளனர். இதை கடத்த முற்பட்ட கும்பல் உலகின் பல நாடுகளில பரவி உள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் பஞ்சாப், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இலங்கை, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கொலம்பியா, மலோசியா நாடுகளுக்கு கடத்தப்படுகின்றது.
இதில், 5 இந்தியர்கள், ஒரு அமெரிக்காவை மற்றும் இந்தோனேஷியாவை சேர்ந்த நபர் ஒருவரும், நைஜீரியாவை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், கைப்பற்றப்பட்ட போதைப் பொருள், உலக தரத்தில் 100 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல், 55 கிலோ கொக்கைன் மற்றும் 200 கிலோ methamphetamine அவுஸ்திரேலியாவில் கைப்பற்றிய போது தெரியவந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.