தொடரும் கொடூரங்கள்... 90 சதவிகித தீக்காயத்துடன் போராடும் பெண்! மீண்டும் அதே பகுதியில்

Report Print Abisha in இந்தியா

உத்தரபிரதேஷம் மாநிலத்தில், 18 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.

22 வயதான நபரை அந்த குறிப்பிட்ட 18 வயது பெண் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் நெருக்கமாக இருப்பதை உறவினர்கள் பார்த்து பஞ்சாயத்தில் பேசி திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.

அதன் பின் கடந்த 13 ஆம் திகதி அந்த பெண்ணை காண வீட்டிக்கு வந்துள்ளார். வீட்டில் மற்றவர்கள் யாரும் இல்லை என்று அறிந்த இளைஞர், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்து எரித்துள்ளார்.

வீட்டிற்கு வந்த பெற்றோர் இதை கண்டு அலறி துடித்து பொலிஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிசார் பெண்ணை மீட்டு கான்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

90 சதவிகித தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியை பிடிக்க பொலிஸார் 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னரும் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டது ஏன்? என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக இதுபோன்று உத்தரபிரதேஷம் மாநிலம் உன்னாவ் பகுதியிலும், தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டி என்ற மருத்துவரும், எரித்து கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்