நடிகை ரஞ்சிதா கண் அசைவில் நித்யானந்தா.. அவர் ஓரினச்சேர்க்கையாளர்! சென்னை இளைஞர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யானந்தா மீது அவரது ஆண் சீடர் கொடுத்துள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண மோசடி, பாலியல் புகார், நில அபகரிப்பு வழக்குகளில் நித்யானந்தாவை பொலிசார் தேடிவரும் நிலையில், அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறுகின்றனர்.

மேலும் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், நித்யானந்தாவின் போதனையில் ஈர்க்கப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு அவர் ஆசிரமத்தில் சேர்ந்தேன்.

திருவாரூர், நாகை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் உள்ள நித்யானந்தாவின் மடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.

என் மூலமாக தமிழ்நாட்டில் இருந்து 350 இளைஞர்கள் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளனர். யோகா, தியானம் பயிற்சி என்ற போர்வையில் நித்யானந்தா மோசடியில் ஈடுபட்டு வருவதை நாளடைவில் தெரிந்துகொண்டேன்.

அவர் ஒரு செக்ஸ் வெறியர். நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் பலர் ஓரினச்சேர்க்கையாளர்கள். நித்யானந்தா என்னையும் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். மொடல் அழகிகளை மயக்கி தன்னிடம் அனுப்புமாறு கூறினார்.

அவரின் செயல்பாடு பிடிக்காமல் கடந்த 2015ல் ஆசிரமத்தில் இருந்து விலகினேன், என்னுடைய 40 லட்சம் மதிப்பிலான நகைகள் அவரிடம் உள்ளது, அதை திருப்பி கேட்டதால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது.

நித்யானந்தா ஆசிரமம் நடிகை ரஞ்சிதாவின் மொத்த கட்டுப்பாட்டில் உள்ளது, அவர் கண் அசைவில் தான் நித்யானந்தா செயல்படுகிறார்.

நித்யானந்தா என்னுடன் பேசிய பாலியல் உரையாடல்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. தேவைப்பட்டால் அதை நீதிமன்றத்தில் சமர்பிப்பேன், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்