ரயில் முன் பாய்ந்து பரிதாபமாக இறந்த கணவன்! அதன் பின் மனைவி எடுத்த விபரீத முடிவின் பின்னணி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த கொண்ட நிலையில், மனைவியும் குழந்தையுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் அவரை மீட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து இறந்தவர் யார் என்று பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அவரின் பெயர் பரத் எனவும் அங்கிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஜெனரல் மேனேஜராக வேலை செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.

இவரது மனைவி, சிவரஞ்சனி, 5 வயது மகள் மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோருடன் நொய்டாவில் வசித்து வந்த அவர்களுக்கு தகவல் கொடுக்க, மருத்துவமனைக்கு குழந்தையுடன் வந்த அவருடைய மனைவி மற்றும் சகோதரர் இறந்தது அவர்தான் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்பிறகு பரத்தின் சகோதரர் கார்த்திக் மட்டும் மருத்துவமனையில் இருக்க, ரஞ்சனி குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த அவர் கணவரின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வேதனையை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். முதலில் தன் குழந்தையை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு, பின் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், பரத்துடைய குடும்பம் பொருளாதார சிக்கலில் இருந்ததாக அவருடைய சகோதரர் கூறியுள்ளார். வீட்டில் கைப்பற்றப்பட்ட உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். வீட்டிலிருந்து தற்கொலை கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்