பற்றியெரியும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள்: குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா, அமெரிக்கா

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் அமுலுக்கு வரவிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

அச்சாம் மாநிலத்தின் கவுகாத்தியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை ஒடுக்க ஆயுதப்படையை களமிறக்கியுள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வந்து செல்லும் வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக்களமாக மாறியுள்ளதால் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், திருபுரா உள்ளிட்ட பகுதிகளில் மாநில அரசுகளின் தடை உத்தரவை மீறி இளைஞர்கல் உள்ளிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாலையே அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தங்கல் குடிமக்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இணைய சேவை முற்றாக முடக்கப்பட்டுள்ளதும், போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் அதிகாரிகளும் ஊடகங்களும் அளிக்கும் தகவலுக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த இரு நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுவடைந்து வருவதால், தங்கள் பயண திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் பிரித்தானியா கோரியுள்ளது.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டால் தங்கள் பெரும்பான்மையும், பெருளாதாரம் மற்றும் கல்வியில் கிடைக்கும் சலுகைகள்,

வேலைவாய்ப்பில் கிடைக்கும் முன்னுரிமை மற்றும் பாரம்பரியமும் அழிந்துவிடும் என வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்களும், பழங்குடி மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்