பிரியங்காவின் உடலில் மது...! குற்றவாளிகள் செய்த கொடூரத்தை நிறுவிய தடயவியல் அறிக்கை

Report Print Basu in இந்தியா

ஐதராபாத்தில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு எரித்த கொல்லப்பட்ட கால்நடை மருத்துவரின் பிரேத பரிசோதனை தடயவியல் நச்சுயியல் அறிக்கை, அவரது உடலில் மது இருப்பதை நிறுவியது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரைக் கைது செய்த பின்னர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வழக்கு குறிப்பில், நவம்பர் 27ம் திகதி டோண்டுபள்ளி டோல் பிளாசா அருகே பாலியல் பலாத்காரம் செய்தபோது சந்தேக நபர்கள் மருத்துவருக்கு மது அருந்துமாறு கட்டாயப்படுத்தியதாக ஷட்நகர் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கை விசாரிக்கும் விசாரிக்கும் ஷாட்நகர் பொலிசார், நச்சுயியல் அறிக்கையை தெலுங்கானா மாநில தடய அறிவியல் ஆய்வகத்திடமிருந்து பெற்றுள்ளனர். கால்நடை மருத்துவரின் கல்லீரல் செல்களில் மது இருப்பதை அறிக்கை உறுதிப்படுத்தியது.

மருத்துவர் தனது இருசக்கர வாகனத்தை டோண்டுபள்ளி டோல் பிளாசா அருகே மாலை 6 மணிக்கு நிறுத்திவிட்டு கச்சிபவ்லி செல்ல ஒரு வண்டியில் ஏறினார்.

கச்சிபவுலியில் உள்ள ஆலிவ் மருத்துவமனையில் தோல் மருத்துவரிடம் ஆலோசித்தபின், அவர் மற்றொரு வண்டியில் ஏறி நவம்பர் 27 அன்று இரவு 9.30 மணிக்கு டோல் பிளாசாவுக்கு திரும்பினார்.

இடையில், அவர் எங்கும் நிற்கவில்லை. எனவே, அவரது உடலில் இருந்த மது குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் வலுக்கட்டாயமாக உட்கொள்ள வைத்தது என்று பொலிசஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

டிசம்பர் 6ம் திகதி சம்பவம் நடந்த சத்தன்பள்ளியில் நடந்த மோதலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொல்லப்பட்டாலும், அனைத்து ஆதாரங்களையும் சேகரித்த பின்னர் பொலிசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...