வெளிநாட்டில் செட்டிலாக ஆசை! கணவனின் மோசமான செயலால் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணின் விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவரின் கொடுமையால் திருமணமான 2 மாதத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்தவர் சிம்மாத்ரி பால கிஷோர் (31). இவருக்கும் ஈஷா பானி என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போதே மணப்பெண் வீட்டரிடம் ரூ 50 லட்சம் பணம், மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை கிஷோர் மற்றும் அவர் குடும்பத்தார் வரதட்சணையாக கேட்டனர்.

இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே ஈஷாவை அடித்து சித்திரவதை செய்ய தொடங்கிய கிஷோர், அவரை மன ரீதியாகவும் துன்புறுத்த துவங்கினார்.

அதாவது அமெரிக்காவில் செட்டில் ஆக தனக்கு 40 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வரை வரதட்சணை வேண்டும் என கூறினார்.

இது குறித்து தனது பெற்றோரிடம் ஈஷா கூறிய நிலையில், அவர்கள் கிஷோரிடம் வந்து சமாதானம் பேசினார்கள்.

இனி தயவுசெய்து எங்கள் மகளை துன்புறுத்தாதீர்கள், நாங்கள் 25 லட்சம் வரதட்சணை கொடுக்கிறோம் என கூறினர்.

ஆனாலும் தொடர்ந்து மனைவியை கிஷோர் துன்புறுத்தி வந்ததால் மனமுடைந்த ஈஷா திருமணமான இரண்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து கிஷோரின் வரதட்சணை கொடுமையால் தான் ஈஷா உயிரைவிட்டார் என பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி கிஷோருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்