சிதறி இருந்த விந்தணுக்கள்...! பிரியங்கா ரெட்டியின் எரிந்த உடல் டி.என்.ஏ அறிக்கை!

Report Print Abisha in இந்தியா

பிரியங்கா ரெட்டியின் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பொலிசார், அவரின் உடலில் எடுக்கப்பட்ட டி.என்.ஏ அறிக்கை மூலம் குற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரியங்கா ரெட்டியை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த நிலையில், அவர்கள்தான் குற்றவாளிகள் என்று உறுதிபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனவே பிரியங்கா ரெட்டியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்கள் மூலம் டி.என்.ஏ சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக அவர் அணிந்திருந்த நகைகள் மூலம் உடல் கண்டறியபட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ குடும்பத்தில் உள்ளவர்களின் டி.என்.ஏ உடன் ஒப்பிட்டு அதை உறுதி செய்துள்ளனர்.

மேலும், அவரது உடலில் குற்றவாளிகளின் விந்தணுக்கள் சிதறி இருந்தது, அவரது உடல்பாகங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி, இந்த அறிவியல்பூர்வமான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ”தி இந்து” ஆங்கில ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரியங்கா ரெட்டியை நான்கு குற்றவாளிகளால் நவம்பர் 27ஆம் திகதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்