மலைப்பாம்பை பிடிப்பதற்கு கிணற்றுக்குள் இறங்கிய நபர்... அதன் பின் நடந்த சம்பவத்தின் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கிணற்றுக்குள் விழுந்த மலைப்பாம்பை பிடிப்பதற்காக வனத்துறையை சேர்ந்த நபரை மலைப்பாம்பு அவரின் உடலை இறுக்கமாக சுற்றி வளைத்ததால், அப்பகுதியில் சிறிதி நேரம் பரபரப்பு நிலவியது.

கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பெராமங்கலம் பகுதியில் உள்ள கிணற்றில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் வனத்துறையினர் அங்கு விரைந்த நிலையில், சாகில் என்ற ஊழியர் கிணற்றுக்குள் கயிறு கட்டி பாம்பை மீட்க முயற்சித்தார்.

நீண்ட முயற்சிக்கு பின் பாம்பை பிடித்து அவர் மேலே ஏறுவதற்காக கயிறை பிடித்து முயற்சித்த போது, திடீரென்று மலைப்பாம்பு, அவரின் உடலை சுற்றி வளைத்ததால், சற்று சிரமப்பட்ட படியே மேலே ஏற முயற்சித்த போது, திடீரென பாம்புடன் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

இதையடுத்து நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்