சொந்த மகளை 30 ஆண்களுக்கு விருந்து வைத்த கொடூர தந்தை: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் 12 வயது சிறுமியை தந்தையே பாலியல் தொழிலில் ஈடுபத்திய பகீர் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் சிறுமியின் தாயாரும் உடந்தை என்ற தகவல் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமக்கு நேர்ந்த கொடுமையை சிறுமியே வாய்ப்பமைந்த போது அம்பலப்படுத்தியுள்ளார். மட்டுமின்றி தமது வாழ்க்கையை சீரழித்த பெற்றோரை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன்வைத்துள்ளார்.

வார இறுதி நாட்களில் மட்டும் சிறுமியை அந்த தந்தை துஸ்பிரயோகத்திற்கு கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 30 ஆண்கள் அவரை துஸ்பிரயோகம் செய்துள்ளனர். மட்டுமின்றி, சில ஆண்கள் ஆபாச படங்களை தயாரிக்கவும் சிறுமியை பயன்படுத்தியுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது சிறுமியின் தந்தை உள்ளிட்ட நால்வர் கைதாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 25 நபர்களை சிறுமி அடையாளம் காட்டியதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் மது போதையில் சிறுமியிடம் ஒருமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதை தந்தையும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னரே அவர் சிறுமியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தத் தொடங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி ஒருகட்டத்தில் தமக்கு நேர்ந்த கொடுமையை ஆசிரியர் ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளவும், அதன் பின்னர் பாடசாலை வழியாகவே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்