பிரியங்கா வழக்கு என்கவுண்டர் விவகாரம்! மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா வழக்கில் நான்கு பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட தொடர்பில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கடந்த 6ஆம் திகதி பொலிசாரால் என் கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

நால்வரும் தங்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் வேறு வழியின்றி என்கவுண்டர் செய்தோம் என காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு நால்வரையும் பொலிசார் என்கவுண்டர் செய்தார்கள் ஒரு சாரார் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் இது சம்மந்தமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், என்கவுண்டர் விவகாரத்தில் நடந்தது என்ன என்ற உண்மை மக்களுக்கு தெரிய வேண்டும்.

என்கவுண்டர் விவகாரத்தில் காவல்துறையின் வாத‌த்தை வைத்து மட்டுமே வழக்கை நடத்த முடியாது.

இது தொடர்பாக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கார் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்.

ஆறு மாதத்தில் விசாரணை நடத்தி இது தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்