பிரியங்கா வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகள் ஒருவருக்கொருவர் அளித்த முரண்பட்ட வாக்குமூலம்: கசிந்தது தகவல்

Report Print Basu in இந்தியா

இந்தியாவை உலுக்கிய ஹைதராபாத் கால்நடை மருத்துவர் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் விசாரணையின் போது முரண்பாடான ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கியதாக அறியப்படுகிறது.

நவம்பர் 27 அன்று 27 வயதான கால்நடை மருத்துவரை கூட்டு வன்புணர்வு செய்த கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும், முகமது ஆரிப் (26), ஜொல்லு சிவா, ஜொலு நவீன் மற்றும் சி.எச். சின்ன கேஷவுலு சுமார் 20 வயதுடையவர்கள் ஆவர்.

டிசம்பர் 4ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வரும், விசாரணைக்காக டிசம்பர் 6ம் திகதி அதிகாலையில், சம்பவயிடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு தப்பிக்க முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து விசாரணையுடன் தொடர்புடைய மூத்த அதிகாரி கூறியதாவது,

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சைபராபாத்தில் உள்ள ரகிய இடத்தில் தனித்தனியாக வைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் பயந்தனர் மற்றும் அவர்கள் குற்றத்தை எவ்வாறு திட்டமிட்டார்கள், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர் மற்றும் கால்நடை மருத்துவரைக் கொன்றது பற்றி வெவ்வேறு விதமாக கூறினர். ஒப்புதல் வாக்குமூலம் பொருந்தவில்லை.

நவம்பர் 27 ம் திகதி மாலை டோல் கேட் அருகே கால்நடை மருத்துவர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதைக் கண்டபோது, ​​ ஆரிப் தான் தங்களை மது அருந்துமாறும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கான சதித்திட்டத்தை மேற்கொண்டதாகவும் மூவரும் கூறினர்.

ஆரிப் மற்ற மூவரின் மீது பழியை முன்வைத்தாலும், மூவரும் ஆரிப் தான் இந்த குற்றத்தை செய்ய தூண்டிவிட்டதாகக் கூறினர் என்று அதிகாரி தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது கூட, அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு விதமாக வாக்குமூலம் அளித்ததாக மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.

ஒருவர் தங்கள் லொறியை நெடுஞ்சாலையில் நிறுத்திய பின்னர் கால்நடை மருத்துவரை கையில் ஏந்தியதாக சொன்னார், மற்றொருவர் மாற்றுப்பாதையை லொறியிலே பாலத்தின் அடியில் சென்றாதாக கூறினார் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் மொபைல் போன், பவர் பேங்க் மற்றும் அவரது கைக்கடிகாரத்தை எங்கே புதைத்தார்கள் என்று காவல்துறை அவர்களிடம் கேட்டபோது கூட, அவர்கள் வெவ்வேறு திசைகளைக் காட்டியதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்