பிழைக்கமாட்டேன்... எனக்காக இந்த உதவி மட்டும் செய்டா! இறப்பதற்கு முன் இளைஞன் நண்பனிடம் சொன்ன வார்த்தை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவின் தலைநகர் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய இளைஞர் இறப்பதற்கு முன் நான் இனி பிழைக்கமாட்டேன், என் குடும்பத்தை பார்த்து கொள் என்று கண்ணீருடன் தன் நண்பரிடம் கூறியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

டெல்லியில் அனாஜ் மண்டி என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஏராளமான கடைகள், ஆலைகள் உள்ளன. அப்படி அங்கிருக்கும் பை தயாரிக்கும் ஆலை ஒன்றில் பணிபுரிந்து வரும் வருபவர்கள், சில மண்டியிலே தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதே போன்று நேற்று அவர்கள் மண்டியில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால், தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் எழுந்து ஓடுவதற்குள் தீ வேகமாக பரவியதால், தீயினுள் பலர் சிக்கினர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் 43 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில், சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த முகமது முஷாரப் என்ற 34 வயது நபர் தனது நண்பர் மோனு அகர்வாலை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, இங்கு நான் இருக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுவிட்டது.

நான் அந்த விபத்தில் சிக்கிவிட்டேன், இதனால் என்னால் உயிர் பிழைக்க முடியாது, என்னுடைய குடும்பத்தை பார்த்து கொள் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

இது குறித்து நண்பர் மோனு கூறுகையில், அவன் என்னிடம் இப்படி கூறியவுடன் நான் அங்கிருந்து எப்படியாவது வெளியே குதித்துவிடு என்று கூறினேன், அவன் தீயணைப்பு வாகனத்தின் சத்தம் கேட்கிறது என்று கூறினான்.

அது தான் அவன் கடைசியாக பேசியது, நாங்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இருவரும் சேர்ந்து பிஜனோரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டோம்.

அது தான் அவனை நான் பார்க்கும் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்