தன் உயிரை பணயம் வைத்து 11 உயிரை காப்பாற்றிய வீரர்

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தன்னுயிரை பணயம் வைத்து 11 உயிரை காப்பாற்றிய இராணுவ வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டெல்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 42 பேர் உயிரிழந்திருப்பதாக தீயணைப்பு அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.

இந்த சம்பவத்தின் போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களில் ஒருவரான ராஜேஷ் சுக்லா, தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல், தீயில் சிக்கியிருந்த 11 பேரின் உயிரை காப்பாற்றினார்.

இதில் அவருடைய கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், அவரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். மேலும் அதனை தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ஒரு உண்மையான நாயகன். விபத்தின் போது முதல் ஆளாக தொழிற்சாலைக்குள் நுழைந்து 11 நபர்களின் உயிரை காப்பாற்றியுள்ளார். கால் எலும்பில் காயம் ஏற்பபட்ட போதும் இறுதிவரை அவரது பணியை தொடர்ந்தார். துணிச்சல் மிக்க இந்த வீரரை வணங்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியும், காயம் அடைந்தவருக்கு 1 லட்சம் நிதியும் வழங்குவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்