90 சதவிகித தீகாயத்துடன் போராடிய பெண் உடல் தகனம்! இருநாட்கள் பேச்சுவார்த்தைக்கு பின் எட்டியது முடிவு

Report Print Abisha in இந்தியா

கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் பெண்ணின் உடல் பெற்றோர் சம்மதத்துடன் தகனம் செய்யப்பட்டது.

உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது குறித்து அவர் பொலிஸிசில் புகார் தெரிவித்து குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜாமீனில் வெளியில் வந்த அவர்களில் இருவர், உள்ளிட்ட ஐந்து பேர் அந்த பெண்ணை சித்தரவதை செய்து தீயிட்டு எரித்தனர். இதில் 90 சதவிகிதம் காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,அவர் உயிரிழந்தார்.

இது குறித்து பெற்றோர் உடலை வாங்க மறுத்தும், தங்களுக்கு முறையான நீதி வேண்டியும் தகனம் செய்ய மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் உயிரிழந்த பெண்ணி குடும்பத்தினருக்கு 24 மணி நேரம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், அவரது சகோதரனுக்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

அதன்பின் தற்போது அந்த பெண்ணி உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்