சிறுத்தையை துடிதுடிக்க கொன்று வாலை வெட்டிய மாணவர்கள்! நடந்தது என்ன? அதிர்வலையை ஏற்படுத்திய வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் அசாம் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிறுத்தையை துடிதுடிக்க கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது. முதல் வீடியோவில் சிறுத்தை இருட்டில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

அதை இரண்டு மாணவர்கள் கண்டுபிடித்த தருணத்தில் அதில் ஒரு மாணவர் விலங்கின் அருகே சென்று அதனை வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அதை கண்டு அக்ரோஷம் அடைந்த சிறுத்தை மாணவர்களை தாக்க முயன்றது.

தன்னை வீடியோ எடுக்க முயன்ற 20 வயதாகும் மூன்றாம் ஆண்டு மாணவர் டெப்ரதா சுட்டியாவை சிறுத்தை தாக்கியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு மாணவனைக் காப்பாற்ற உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர்.

இதைக்கண்டு பயந்துபோன சிறுத்தை அங்கிருந்து தப்பியது. இதையடுத்து மாணவர் டெபபிரதாவை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு சிறுத்தை மீண்டும் அந்த பகுதியில் தெரிந்தது. இதை கண்ட விடுதி ஊழியர்கள் மற்றும் மாணர்கள் சிறுத்தை மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதில் பரிதாபமாக சிறுத்தை உயிரிழந்து போனது. அந்த கல்லூரியின் மாணவர் நலி தாலுக்தார் கூறுகையில், உள்ளூர்வாசிகளும் மாணவர்களும் சிறுத்தையை அகலமான குழாய்கள் மற்றும் கம்புகளால் பயங்கரமாக தாக்கினர். அதன் வால் கூட துண்டிக்கப்பட்டது.

இது ஒரு காட்டுமிராண்டித்தனமான சம்பவம், நாங்கள் இது தொடர்பில் பொலிசில் புகாரளிக்க உள்ளோம் என கூறியுள்ளார்.

இதனிடையில் சிறுத்தை உயிரிழந்து கிடக்கும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்